மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். “அரசன்”, “Train”, “Slum Dog: 33”, “ஜெயிலர் 2”, பாலாஜி தரணீதரன் இயக்கும் படம் மற்றும் “பாக்கெட் நாவல்” உள்ளிட்ட பல படங்கள் அவரது கைவசம் உள்ளன.
இதற்கு மேலாக, இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் “காட்டான்” என்ற வெப் தொடரிலும் அவர் நடித்துள்ளார். இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்த தொடர் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
தனக்கு மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் விஜய் சேதுபதி. அதுவே அவரை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்குகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் பேசிய ஒரு கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. “தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது. எதாவது ஒரு பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லப்போய், பிறகு நம்ம படத்துக்கு ஏதாவது பிரச்சனை பண்ணிவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.



