தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் சமீபத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, நடிகை த்ரிஷா குறித்து அவர் முன்பு பேசிய கருத்து பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு பேச்சு வைரலாகியுள்ளது.
தற்போது அவர் நடித்துள்ள தெலுங்கு படம் “உஸ்தாத் பகத் சிங்” ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், மேடையில் பேசும்போது தனது முழுப் பெயருடன் ஜாதி அடையாளத்தையும் குறிப்பிட்டார்.
“நான் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், நாயுடு அப்பாயி. சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தமிழ் நன்றாக பேசுவேன். தெலுங்கு சரியாக தெரியாது. இந்த படத்தின் வெற்றி விழாவில் முழுவதும் தெலுங்கில் பேசுவேன்” என்று அவர் கூறினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஜாதி அடையாளத்தை மேடையில் குறிப்பிட்டது தேவையா என்ற கேள்வியுடன் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதன் மூலம், மீண்டும் ஒருமுறை பார்த்திபன் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார்.



