நடிகை த்ரிஷா மற்றும் தொழில் அதிபர், தயாரிப்பாளர் வருண் மணியன் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்களும் அப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது. ஆனால் அதன் பின்னர் எதிர்பார்த்தபடி திருமணம் நடைபெறாமல், அந்த உறவு முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஏன் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் தன்னை நடிப்பை கைவிடச் சொன்னதாகவும், ஆனால் படங்களில் நடிப்பதை நிறுத்துவதற்குப் பதிலாக திருமணத்தை நிறுத்த முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நான் கர்ப்பமாகும் சூழ்நிலை வந்தால் மட்டுமே நடிப்பில் இருந்து சிறிது இடைவெளி எடுப்பேன். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலகவே மாட்டேன்.
உயிர் இருக்கும் வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார். சினிமாவை மிகவும் நேசிக்கும் த்ரிஷா, அதற்கான அடையாளமாக தனது முதுகில் வீடியோ கேமரா டாட்டூ கூட வைத்திருக்கிறார்.
சுமார் 26 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் முன்னணி நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.



