நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், தாம் தயாரித்த ‘கனா’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது மிகவும் நிறைவு கிடைக்கிறது என்று கூறினார்.
மேலும் தனது குடும்ப வாழ்க்கை குறித்து உருக்கமாக பேசிய அவர், தமக்கு திருமணம் ஆன நாளில் இருந்து தனது மனைவி ஆர்த்தி தான் குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை பார்த்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.
தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதே தமக்கு தெரியாது என்றும், செலவுக்கு பணம் தேவைப்பட்டால் கூட மனைவி ஆர்த்தியிடமே கேட்டு வாங்குவேன் என்றும் கூறினார். இதை தாம் பெருமையாக நினைக்கிறேன் என்றும், அவர் அனைத்தையும் சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்றால் தமக்கு தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவது கூட சாத்தியமாக இருந்திருக்காது என்றும் சிவகார்த்திகேயன் மேடையில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.



