உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் தாய் கிழவி படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.

Worldwide Box Office of Thaai Kizhavi Movie

Ad Space

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். மேலும், நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று படக்குழுவினர் அனைவரும் இணைந்து வெற்றி விழாவை கொண்டாடினர்.

இந்த நிலையில், வெளியானதிலிருந்து 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வசூல் விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 57.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ad Space

Related News

Share