நடிகை த்ரிஷா தனது திருமண வாழ்க்கை குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், தனது வாழ்க்கைத் துணையை எப்படி தேர்ந்தெடுப்பார் என்பதையும், திருமணம் குறித்து தனது எண்ணங்களையும் த்ரிஷா விரிவாக பகிர்ந்திருந்தார். “திருமணம் செய்வதற்கு முன், எனக்கு கணவராக வரப்போகும் நபர் தான் என் வாழ்க்கை முழுவதும் துணையாக இருப்பவர் என்று நான் உணர வேண்டும். அவருடன் தான் இந்த வாழ்க்கையை வாழப்போகிறேன் என்ற உறுதி எனக்கு வர வேண்டும். ஏனெனில், எனக்கு விவாகரத்தில் துளியும் நம்பிக்கை இல்லை. திருமணத்திற்கு பிறகு ஒருபோதும் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. அதனால் திருமணம் செய்வதற்கு முன் நூறு முறை யோசித்து தான் முடிவெடுப்பேன்” என்று அவர் கூறியிருந்தார். மேலும், “வேறொருவரை காயப்படுத்தவோ அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழவோ எனக்கு விருப்பமில்லை.
என்னைச் சுற்றி பலர் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியில்லாமல் வாழ்வதை பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டாம். திருமணம் எனக்கு இரண்டாவது விஷயம் தான். முதலில் எனக்கு ஒருவர் பிடித்தால் அவரை காதலிக்க தொடங்குவேன், அதன் பிறகு தான் திருமணம் பற்றி யோசிப்பேன். அப்படிப்பட்ட ஒரு சரியான துணையை நான் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று த்ரிஷா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது இந்த பழைய பேட்டி மீண்டும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



