விஜய் பாடல்களுக்கு தடை… ரசிகர்கள் அதிர்ச்சி!

Ban on Vijay songs in Tamil Nadu schools shocks fans

Ad Space

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு உள்ள ரசிகர் ஆதரவு மிகவும் பெரிது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சமீபத்தில் வெளியான சில தகவல்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு முழுமையாக குதித்துள்ள நிலையில், அவரது நடவடிக்கைகள் மற்றும் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இதன் காரணமாகவே சில ஊடகங்களில் அவரது படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப்படவில்லை என ரசிகர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதற்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விஜய்யின் கட்சி சின்னமான “விசில்” கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

Ad Space

Related News

Share