“நான் சொன்னதை மட்டும் பண்ணல…” – கென் கருணாஸை கலாய்த்த தனுஷ் பேச்சு வைரல்!

Dhanush teasing Ken Karunas at Youth movie launch event viral speech

Ad Space

நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை நடிகை கிரேஸ் ஆகியோரின் மகனான இவர், தற்போது ‘யூத்’ என்ற படத்தை இயக்கி இளம் வயதிலேயே இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் விழா இன்று நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தனுஷ், ‘அசுரன்’ படத்தில் சிதம்பரம் கூறிய புகழ்பெற்ற வசனத்தை நினைவுபடுத்தி பேசினார்.

“நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க, ரூபா இருந்தா புடிங்கிடுவாங்க… ஆனா படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது” என்று அந்த படத்தில் சொன்னதை குறிப்பிட்ட அவர், “அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க” என்று சிரிப்புடன் கூறினார். மேலும், ‘யூத்’ படத்தின் முதல் போஸ்டரிலேயே கென் கருணாஸ் மூன்று பெண்களுடன் பைக்கில் உட்கார்ந்திருப்பதை சுட்டிக்காட்டி கலகலப்பாக விமர்சித்தார்.

தனுஷின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ad Space

Related News

Share