நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் பெயரை குறிக்கும் இனிஷியலை ஜேசன் சஞ்சய் பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில், சிலர் அதற்கு பல்வேறு கருத்துகளை பதிவு செய்து,
அப்பாவின் பேச்சுக்கு மகன் பதிலடி கொடுத்துள்ளார் எனவும் விமர்சித்தனர். இதற்கிடையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி வரும் தனது புதிய படத்தின் டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. சில தகவல்களில் அவர் “Jason Sanjay S” என்று கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த ‘S’ அவரது தாய் சங்கீதாவின் பெயரை குறிக்கிறது என்றும் இணையத்தில் பேசப்பட்டது.
ஆனால் பின்னர் வெளியான தகவல்படி, ஜேசன் சஞ்சய் தனது தாயின் இனிஷியலையும் பயன்படுத்தவில்லை என்றும், அவர் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் டீசரில் கூட எந்த இனிஷியலும் இல்லாமல் தனது பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



