நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யைச் சுற்றி சமீபத்தில் விவாகரத்து தொடர்பான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவரது மனைவி சங்கீதா அளித்ததாக கூறப்படும் புகாரில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே உறவு இருப்பதாகவும், தேவையானால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக சென்றதாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டதால் விவாதம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில்,
இன்று விமான நிலையத்திற்கு வந்த நடிகை த்ரிஷாவிடம், விஜய்யுடன் திருமண நிகழ்விற்கு சென்றது குறித்து எழுந்த சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மைக்கை நீட்டி செய்தியாளர்கள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை திரிஷா எந்த ஒரு பதிலும் கூறாமல், மௌனமாகவே கடந்து சென்றார்.



