நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Is Trisha quitting cinema fans shocked by rumours

Ad Space

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் நடிகை திரிஷா, இன்றும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கும் அவர், தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது திரிஷா நடிப்பில் “கருப்பு” திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல், மலையாளத்தில் “ராம்” மற்றும் தெலுங்கில் “விஸ்வம்பரா” போன்ற படங்களும் அவரிடம் உள்ளன.

இந்நிலையில், 42 வயதிலும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சினிமாவிலிருந்து விலகப் போகிறாரா என்ற கேள்வி எழும் வகையில் ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 75 படங்களில் நடித்துள்ள அவர், கடந்த மூன்று மாதங்களாக எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால், திரிஷா உண்மையிலேயே சினிமாவிலிருந்து விலகப்போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து திரிஷா தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ad Space

Related News

Share