தமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் தனது வித்தியாசமான குரலும், ஸ்டைலான வில்லன் நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். வில்லன் லுக்கில் மிரட்டினாலும், அவரது கரகரப்பான குரலுக்கு மயங்காதவர்கள் அரிது என்று சொல்லலாம்.
2012ஆம் ஆண்டு Perumaan படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன் தாஸ், அதன் பிறகு கைதி, அந்தகாரம், மாஸ்டர், விக்ரம், போர், குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை பெரிதும் பெற்றார்.
பல பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வரும் அவர், சமீபத்தில் தனது Instagram ஸ்டோரியில் ஒரு பதிவு பகிர்ந்துள்ளார்.
அதில்,
“ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அந்த வலியிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும்?”
என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அர்ஜுன் தாஸுக்கு காதல் தோல்வியா? என்ற கேள்வியுடன் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவரது இந்த மர்மமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



