நடிகை அனுஷ்கா ஷெட்டி கடந்த சில வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல்கள் பலமுறை வெளியாகி இருந்தன. அதனால் தான் அவர் திரைப்படங்களில் நடிப்பதை சில ஆண்டுகள் குறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அனுஷ்கா மற்றும் நடிகர் பிரபாஸ் குறித்து முன்பே பல காதல் கிசுகிசுக்கள் பரவியிருந்தாலும், இருவரும் அது வெறும் நட்பு மட்டுமே என விளக்கம் அளித்திருந்தனர். தற்போது 44 வயதாகும் அனுஷ்கா எப்போது திருமணம் செய்வார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அந்த நிலையில், இந்த வருடமே அனுஷ்காவின் திருமணம் நடைபெற இருக்கலாம் என்ற தகவல் தெலுங்கு மீடியாக்களில் வெளியாகியுள்ளது. அவரது குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தொழிலதிபருடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது என்றும், இரு குடும்பங்களும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த தகவலை உறுதியாக சொல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.



