33 வயதாகும் நடிகை ஆலியா பட் சொத்து மதிப்பு மதிப்பு, எவ்வளவு தெரியுமா?

Bollywood actress Alia Bhatt net worth and birthday celebration

Ad Space

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். இளம் வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

2012ஆம் ஆண்டு வெளியான “Student of the Year” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஆலியா பட், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

குறிப்பாக “Gangubai Kathiawadi” திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த அவர், தனது திறமையான நடிப்பால் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றார்.

தற்போது ஆலியா பட் நடிப்பில் “Alpha” மற்றும் “Love & War” போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஆலியா பட் கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராஹா என்ற அழகான மகளும் உள்ளார்.

இந்நிலையில் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஆலியா பட்டுக்கு ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 550 கோடி என கூறப்படுகிறது. திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் ஆலியா பட் இந்த அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறார்.

இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக வருமானம் பெறும் மற்றும் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகைகளில் ஒருவராக ஆலியா பட் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ad Space

Related News

Share