4 கிலோ தங்க நகைகளுடன் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்… திருப்பதியில்

Devotee wearing 4 kg gold jewellery at Tirupati Balaji temple

Ad Space

தெலுங்கானா ஹாக்கி சங்கத்தின் தலைவரான விஜயகுமார் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் கலந்து கொண்டார். நகைகளை விரும்பும் இவரை பார்க்க அங்கு இருந்த பக்தர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

அதற்கு காரணம், அவர் தனது உடல் முழுவதும் சுமார் 4 கிலோ தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தது தான். இந்த காட்சி அங்கு வந்திருந்த பல பக்தர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர சோனி குடும்பத்தினரும் தரிசனத்தில் கலந்து கொண்டனர். அந்த குடும்பத்தில் இருந்த நான்கு பேரும், ஏழுமலையான் உருவம் பதித்த தலா 500 கிராம் தங்க நகைகளை அணிந்து வந்திருந்தனர். மொத்தமாக அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளின் எடை சுமார் 4 கிலோ என கூறப்படுகிறது. இதை பார்த்த சாதாரண பக்தர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Devotee wearing around 4 kg of gold jewellery

நேற்றைய தினம் திருப்பதி கோவிலில் மொத்தம் 67,264 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதில் 29,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூலாகியுள்ளது.

மேலும், நேரடி இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Ad Space

Related News

Share