ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை குஷ்பு. பல ஹிட் திரைப்படங்களில் நடித்த அவர், பின்னர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.
திருமணத்திற்குப் பிறகு குஷ்பு டிவி சீரியல்களிலும் நடித்தார். தற்போது அவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அதே நேரத்தில் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் குஷ்பு தற்போது பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
மேலும் அவர் தனது கணவர் சுந்தர் சியுடன் சேர்ந்து திரைப்படங்களை தயாரிப்பாளராகவும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்புவின் பெயரில் போலியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்கி சிலர் மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த போலி ஈமெயில் மூலம் சிலருக்கு மெசேஜ்கள் அனுப்பி, பிரபலங்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில், “அந்த ஈமெயில் நான் அல்ல. நான் யாரிடமும் அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டுமென்றால் வழக்கம் போல போன் மூலம் தான் தொடர்பு கொள்வேன். அந்த போலி மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோசடி தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். நடிகை குஷ்பு வெளியிட்ட இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



