பிரபல பாடகியான Chinmayi Sripaada, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவரான சின்மயி, Kannathil Muthamittal திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலே பெரிய வெற்றியை பெற்றதால், தொடர்ந்து பல பாடல் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

பாடகியாக மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் சின்மயி தன்னை நிரூபித்துள்ளார். குறிப்பாக, Vairamuthu மீது MeToo வழியாக குற்றச்சாட்டு முன்வைத்த பிறகு, அவருக்கு ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடை குறித்து பெரும் விவாதம் எழுந்தது.
அதன் பின்னர், சில காலம் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்த சின்மயி, Leo திரைப்படத்தில் Trishaக்கு டப்பிங் வழங்கி மீண்டும் கவனம் பெற்றார். இயக்குநர் Lokesh Kanagaraj எடுத்த இந்த முடிவு அப்போது பெரும் பேசுபொருளாக அமைந்தது.

அண்மையில் ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டில் சின்மயி பாடிய “முத்த மழை” பாடலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

இந்த நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களை சின்மயி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த இந்த புகைப்படங்களில், அவரது குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அழகான குடும்ப தருணங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.



